/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் மத்திய அமைச்சர் தரிசனம்
/
ராமேஸ்வரம் கோயிலில் மத்திய அமைச்சர் தரிசனம்
ADDED : ஜூலை 11, 2024 10:04 PM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மத்திய மீன்வளம், கால்நடைத் துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் தரிசனம் செய்தார்.
நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் வந்தார். அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் அமைச்சர் உறவினர்களுடன் பங்கேற்றார். அங்கிருந்து தனுஷ்கோடி சென்றார்.
முன்னதாக ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு சென்றார். அங்கு கலாம் அண்ணன் மகள் நஜீமா மரைக்காயர் எழுதிய ஆல விருட்சம் எனும் தமிழ் நுாலை மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் பிரியா சீனிவாசன் எழுதிய 'கலாம் பேமிலி ட்ரீ' எனும் நுாலை அமைச்சர் வெளியிட்டார்.
அப்துல்கலாம் பேரன் ேஷக்சலீம், நஜீமா மரைக்காயர், அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், ராமநாதபுரம் மீன்துறை உதவி இயக்குநர் கோபிநாத் உட்பட பலர் பங்கேற்றனர்.