/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்சூரன்ஸ் பணம் வழங்க கோரி கடிதம்
/
இன்சூரன்ஸ் பணம் வழங்க கோரி கடிதம்
ADDED : ஜூலை 12, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி கீழப்பருத்தியூர் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்க வலியுறுத்தி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கீழப்பருத்தியூர் விவசாய கமிட்டி தலைவர் நடராஜன் கூறியதாவது:
நடப்பு ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் செய்த விவசாயிகள் 348 பேருக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு வேளாண் துறை மூலம் நிவாரணம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பயிர் இன்சூரன்ஸ் நிறுவனம் உரிய தொகையை வழங்க வேண்டி மத்திய அரசு, வேளாண் துறை, இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு கமிட்டி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.