/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குடிநீர் திட்டத்தை முறைப்படுத்த நதிநீர் இணைப்பு திட்டம் வர வேண்டும் பரமக்குடி வியாபாரிகள் சங்க பொதுக்குழு மனு

ADDED : ஜூலை 25, 2024 04:11 AM

பரமக்குடி: பரமக்குடியில் வியாபாரிகள் சங்கம் 51ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. பரமக்குடி வியாபாரிகள் சங்க தலைவர் போஸ் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஜெயம் அந்துவான் வரவேற்றார்.
பொருளாளர் திருநாவுக்கரசு நிதிநிலை அறிக்கை, பொதுச் செயலாளர் மணிவண்ணன் செயல் அறிக்கை வாசித்தனர். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணைத் தலைவர்கள் ஜீவானந்தம், லெனின்குமார் பேசினர். சங்கம் சார்பில் தீர்மானங்களை முன்மொழிந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அதில், பரமக்குடியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து சீமைக் கருவேல மரங்கள், நாணல்களை அப்புறப்படுத்தி சீரமைக்க வேண்டும்.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு காவிரி, வைகை, குண்டாறு, கிருதுமால் நதி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலக்காமல் விநியோகம் செய்ய வேண்டும்.
நகரில் சுற்றித் திரியும் கால்நடைகள், நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். நகரில் தரமான ரோடுகளை அமைக்க வேண்டும், என வலியுறுத்தினர்.
வியாபாரிகள் சங்க நிர்வாகக் குழுவினர் மற்றும் அனைத்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் சுப்பையா நன்றி கூறினார்.