/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாரதிய மஸ்துார் சங்கம் 70ம் ஆண்டு துவக்க விழா
/
பாரதிய மஸ்துார் சங்கம் 70ம் ஆண்டு துவக்க விழா
ADDED : ஜூலை 25, 2024 04:11 AM
பரமக்குடி: பரமக்குடி கேசவ பவனத்தில் ராமநாதபுரம் மாவட்ட பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில் 70ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
மாவட்ட கைத்தறி பிரிவு தலைவர் காசி விஸ்வநாதன் தலைமை வகித்தார். பாரதிய மஸ்துார் சங்க மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் மோகன்ராம் வரவேற்றார். மாநில கைத்தறி பேரவை தலைவர் பாபுலால் பங்கேற்று பேசினார்.
அப்போது தேச பக்தி கொண்ட தொழிலாளர்களை ஒன்றிணைத்து நம் தாய் நாட்டை பொருளாதாரத்தில் உயர்ந்த நாடாக்க உறுதி ஏற்க வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தினார். கைத்தறி மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கைத்தறி பிரிவு மாவட்ட செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.