/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் திருவிழாவை ஒற்றுமையாக நடத்த வேண்டும் சமாதான கூட்டத்தில் முடிவு

ADDED : ஜூலை 25, 2024 04:12 AM
திருவாடானை: கோயில் திருவிழாவை ஒற்றுமையுடன் நடத்த வேண்டும் என்று சமாதானக் கூட்டத்தில் பேசி முடிவு செய்யபட்டது.
தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமத்தில் எழுத்தாயிரமுடைய அய்யனார் மற்றும் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில்களில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இது சம்பந்தமாக திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் தாசில்தார் அமர்நாத் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். அதில் உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவின் படி அனைவரும் ஒற்றுமையுடன் திருவிழா நடத்த வேண்டும். திருவிழாவின் போது புரவி எடுப்பு விழாவில் இணைந்து செயல்பட வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு காரணமாக கலைநிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தரப்பில் பேசப்பட்டது. இக்கருத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதால் நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.