/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடிகர் சீனிவாசன் மீதான வழக்கு தள்ளிவைப்பு
/
நடிகர் சீனிவாசன் மீதான வழக்கு தள்ளிவைப்பு
ADDED : ஜூலை 25, 2024 04:12 AM
ராமநாதபுரம்: -தேவிபட்டினம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி 60. இறால் பண்ணை, உப்பளம் தொழில் செய்து வருகிறார். இவரது தொழில் அபிவிருத்திக்காக ரூ.15 கோடி கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்துள்ளார்.
இதனை அறிந்த நடிகர் சீனிவாசன் தான் கடன் வாங்கிதண தருவதாக கூறி அதற்காக முத்திரை கட்டணத்திற்காக ரூ.15 லட்சம் முனியசாமியிடம் வாங்கினார். தொகையை பெற்ற சீனிவாசன் கடன் வாங்கித்தராமல் ஏமாற்றியவர் ரூ.14 லட்சத்திற்கு காசோலை வழங்கினார்.
அதை முனியசாமி வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து முனியசாமி ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் -1ல் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நடிகர் சீனிவாசன் ஆஜராகவில்லை.
இதனால் மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் வழக்கு விசாரணையை ஆக.8க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.