/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அந்தோணியார் சர்ச் தேர் பவனி நிறைவு
/
அந்தோணியார் சர்ச் தேர் பவனி நிறைவு
ADDED : ஜூன் 17, 2025 06:33 AM
கமுதி; கமுதி மெயின் பஜாரில் உள்ள அந்தோணியார் சர்ச் 300 ஆண்டுகள் பழமையானது. இங்கு தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஜூன் 2ல் கொடியேற்றம் நடந்தது.
தினந்தோறும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக திருப்பலி முடிந்து அந்தோணியார், ஜெபஸ்தியார், மிக்கேல் சம்மனசு, சவேரியார் தேர்பவனி மின்னொளி அலங்காரத்தில் நடந்தது.
சர்ச்சில் இருந்து கிறிஸ்தவர் தெரு உட்பட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. பின் கர்த்தர் நினைவு திருப்பலி அசனம் நடந்தது. நிறைவாக கொடி இறக்கத்துடன் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை முடிந்தது. பின்பு ஆடுகளை பலியிட்டு 600 கிலோ கறி சமைத்து மதம் சமூக ஒற்றுமையுடன் அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரத உறவின் முறையார், விழாக் குழுவினர் செய்தனர்.