/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆபத்தான நிலையில் போலீசார் குடியிருப்பு விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
/
ஆபத்தான நிலையில் போலீசார் குடியிருப்பு விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
ஆபத்தான நிலையில் போலீசார் குடியிருப்பு விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
ஆபத்தான நிலையில் போலீசார் குடியிருப்பு விஷ ஜந்துக்கள் நடமாட்டம்
ADDED : மே 26, 2025 02:04 AM

கீழக்கரை: கீழக்கரை போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பு சேதமடைந்து இடிபாடுகளுடன் ஆபத்தான நிலையில் உள்ளதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.
கடந்த 1995ல் கட்டப்பட்ட 20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தற்போது பயன்பாடின்றி இடிபாடுகளுடன் உள்ளது. 2013க்கு பிறகு போலீஸ் குடியிருப்பு முழுவதுமாக காலி செய்யப்பட்டது. சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகே பொதுமக்கள் மற்றும் போலீசார் செல்வதற்கு கூட வழி இல்லாத நிலை உள்ளது.
அப்பகுதி முழுவதும் சீமைக் கருவேல மரம் மற்றும் புதர் அடர்ந்து வளர்ந்துள்ளதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அருகில் குடியிருப்போர் விஷஜந்துக்களின் நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ளனர்.
எனவே சேதமடைந்த பயன்பாடற்ற கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு அவ்விடத்தில் போலீசாருக்கென புதிய குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.