/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை
/
ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை
ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை
ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை
ADDED : ஜூன் 27, 2025 11:44 PM
ராமநாதபுரம்:ஈரான் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்கள் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால் தவிக்கின்றனர்.
ஈரானில் உள்ள கிஸ் தீவுபகுதியில் திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரத்தை சேர்ந்த நுாறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழிலுக்காக சென்றுள்ளனர். போரால் அவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு அங்கு உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர். இணையதள இணைப்பு இல்லாததால் குடும்பத்தினரிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த சூசைராஜ் கூறியதாவது:
எனது மகன் ஆஸ்கர் 24, இவரது உறவினர் பிரதீப் 26, ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ரோகின் 20, ஆகிய மூவரும் ஓராண்டுக்கு முன்பு ஈரான் சென்றனர். 20 நாட்களாக அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
தற்போது 3 நாட்களாக இணையதள இணைப்பு கிடைக்கிறது. அவர்களை மீட்க இந்திய துாதரக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு வருகின்றனர். இன்று வரை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கை இல்லை. அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.