/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீட்டில் மின்கசிவால் தீ விபத்து
/
வீட்டில் மின்கசிவால் தீ விபத்து
ADDED : மே 26, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு வீட்டில் திருச்சியை சேர்ந்த இஸ்மாயில் 65., வசித்தார்.
நேற்று அதிகாலையில் அவர் ஊருக்கு செல்லும் போது அங்குள்ள அறையில் உள்ள வாட்டர் ஹீட்டரில் உள்ள மின் சுவிட்சை அணைக்காமல் கதவை பூட்டிவிட்டு சென்றார்.
சுவிட்சில் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது.
புகை சன்னல் வழியாக வெளியே வந்ததால் அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
திருவாடானை தீயணைப்புவீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து அணைத்தனர். இதில் சில துணிகள் மட்டும் சேதமடைந்தன.