/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட போலீசில் முதல் பெண் ஜீப் டிரைவர்
/
மாவட்ட போலீசில் முதல் பெண் ஜீப் டிரைவர்
ADDED : ஜூன் 26, 2025 01:07 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் துறையில் முதன் முறையாக பெண் ஒருவர் ஆயுதப்படையில் ஜீப் டிரைவராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண் போலீசாரை டிரைவராக போலீஸ் வாகனங்களுக்கு நியமிக்க எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட்டுள்ளார்.இதனடிப்படையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு ஜீப் இயக்குவது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
முதல் கட்டமாக ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வந்த பிரியதர்ஷினிக்கு ஜீப் இயக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
அவர் ஆயுதப்படை பிரிவில் பெண் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரியதர்ஷினி ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ஜீப்பை இயக்குவதற்கு பணி அமர்த்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து எஸ்.பி., சந்தீஷ் முன்னால் அமர்ந்து பயணித்து வாகனம் ஓட்டிய பெண் போலீசை பாராட்டினார்.
மாவட்டத்தில் பெண் போலீசார் வாகனங்களில் டிரைவராக நியமிக்கப்படுவார்கள் என்றும் இதற்கு ஏற்ப ஆர்வமுள்ள பெண் போலீசாருக்கு வாகனங்கள் இயக்க பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார்.