ADDED : ஜன 17, 2024 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று பொங்கல் விடுமுறை நாளை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனத்தில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். சுவாமி தரிசனம் செய்த சுற்றுலா பயணிகள், சுற்றுலா தளமான தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் குவிந்தனர் .இங்குள்ள அழகிய கடற்கரை, அலைகளை பார்த்து ரசித்தனர்.
பின் ஆபத்தை உணராமல் கடலில் குளித்து விளையாடினர். இங்கு கார் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் வானங்களை தேசிய நெடுஞ்சாலை இருபுறுத்திலும் நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்பட்டனர்.

