/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் வலியுறுத்தல்
/
புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் வலியுறுத்தல்
புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் வலியுறுத்தல்
புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 04, 2025 03:38 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகள் முடிந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்துள்ளனர். அங்கிருந்து விரைவில் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் 91 கடைகளுடன் ரூ.20 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை நேற்றைய அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் பஸ் ஸ்டாண்டிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் பலகை நேற்று காலையில் தான் வைக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டில் அனைத்து வழித்தடங்களுக்கும் செல்லும் பஸ்கள் நின்று செல்லும் வகையில் தனித்தனி 'ரேக்' அமைக்கப்பட்டுள்ளன. எனவே புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து அனைத்து பஸ்களும் இயங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் கூறுகையில், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்களை நாளை (இன்று) முதல் இயக்க போக்குவரத்து கழகத்திடம் கூறியுள்ளோம்.
அவர்கள் முடிவு செய்ய வேண்டும். சனி அல்லது ஞாயிறு முதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

