/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்கள் அவதி: ராமநாதபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி: ஒரு மணி நேர விழாவிற்கு 3 மணி நேரம் காத்திருப்பு

ADDED : அக் 04, 2025 03:38 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழா ஒரு மணி நேரத்தில் முடிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு வந்த ஏராளமான பொது மக்கள் போதிய குடிநீர், மின்விசிறி வசதியின்றி 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சிரமப்பட்டனர். நேற்று காலை ராமநாதபுரம் அருகே பேராவூர் திடலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காலை 9:30 மணிக்கு வந்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 50 ஆயிரத்து 752 பேருக்கு ரூ. 426 கோடியே 83 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
இவ்விழாவில் பங்கேற்க அரசு, தனியார் கல்லுாரிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பஸ்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரம் பொதுமக்களை அழைத்து வந்திருந்தனர். ஒவ்வொரு ஒன்றியம் வாரியமாக பிரித்து தனித்தனி பாக்ஸ்களில் மக்கள் அமர வைக்கப்பட்டனர். அங்கு பெயரளவில் மின்விசிறி, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தால் மக்கள் வெப்ப சலனத்தால் சிரமப்பட்டனர்.
காலை 9:30 மணி விழாவிற்காக காலை 8:00 மணி முதலே மக்கள் காத்திருந்தனர். விழா சரியாக ஒரு மணிநேரத்தில் (காலை 10:30மணிக்கு) முடிந்து விட்டது. ஆனால் மேடையிலிருந்து வெளியே அவர்களது வாகனங்களுக்கு செல்வதற்கு போதிய வழிகாட்டுதல் இன்றி மக்கள் சிரமப்பட்டனர்.
மேலும் கண்டபடி நிறுத்தப்பட்ட வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் மக்கள் நீண்ட நேரம் சாலையில் காத்திருந்து சிரமப்பட்டனர்.