/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பேரவை கூட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பேரவை கூட்டம்
ADDED : ஜூன் 27, 2025 11:43 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள வளர்ச்சித்துறை இல்லத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சிறப்பு மாவட்ட பேரவைக் கூட்டம் நடந்தது.
சங்கத்தின் மாநில செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் மன்சூர் வரவேற்றார். மாநில தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் கொடியேற்றப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். லஞ்ச ஊழல் தடுப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பிற மாவட்டங்கள் போல விரைவாக பணியிடங்களை வழங்க வேண்டும்.
அலுவலக உதவியாளர், இரவு காவலர்கள், சத்துணவு காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். கூட்டத்தில் முன்னாள் மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.