/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பந்தய மாடு வளர்ப்பதில் இளைஞர்கள் ஆர்வம்
/
பந்தய மாடு வளர்ப்பதில் இளைஞர்கள் ஆர்வம்
ADDED : மார் 21, 2025 05:58 AM
திருவாடானை : மாட்டுவண்டி போட்டிளுக்கு பந்தய மாடுகள் வளர்ப்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
திருவாடானை பகுதியில் சில காலமாக சீறிப்பாயும் மாட்டுவண்டி போட்டிகள் அதிகமாக நடக்கிறது. பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு என நான்கு வகையான போட்டிகள் நடக்கிறது. ஆரம்ப காலத்தில் மிகவும் அரிதாக காணப்பட்ட இப் போட்டிகள் தற்போது அதிகமாக நடக்கிறது.
பண்டைய காலத்தில் நாட்டாமைக்காரர்கள் வீடுகளில் தான் பந்தய மாடுகள் வளர்க்கப்படும். ஆனால் தற்போது பெரும்பாலன வீடுகளில் மாடுகள் வளர்ப்பு அதிகமாகியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
திருவாடானையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதில் இளைஞர்கள் சாரதியாக மாடுகளை ஓட்டினர். வண்டியை விட்டு கீழே இறங்கி மாட்டின் வேகத்திற்கு அவர்களும் ஓடினார்கள்.
கிராம மக்கள் கூறுகையில், தேவகோட்டை, திருவாடானை சுற்றுவட்டார கிராமங்களில் பெரும்பாலன வீடுகளில் பந்தய மாடுகள் வளர்க்கப்படுகிறது. இதில் இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். போட்டியில் வெற்றி பெறும் சாரதிகளின் பெயர்களை அறிவிக்கும் போது அதில் புகழ், பெருமைப்படுகின்றனர். இதற்காக பல லட்ச ரூபாய் செலவு செய்து மாடுகளை வளர்ப்பதாக தெரிவித்தனர்.