/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் மூதாட்டி பலியான வழக்கு வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
/
விபத்தில் மூதாட்டி பலியான வழக்கு வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
விபத்தில் மூதாட்டி பலியான வழக்கு வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
விபத்தில் மூதாட்டி பலியான வழக்கு வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 31, 2024 07:44 AM
சங்ககிரி: சங்ககிரி, தேவூர் அருகே செட்டிப்பட்டி, சந்-தைப்பேட்டையை சேர்ந்த முத்துசாமி மனைவி குப்பாயி, 75. இவர், 2022 ஜன., 31ல், அதே பகு-தியில் உள்ள வாரச்சந்தைக்கு சென்றுவிட்டு, சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது வந்த, 'பேஷன் புரோ' பைக் மோதி-யதில், படுகாயம் அடைந்த குப்பாயி, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயி-ரிழந்தார்.
தேவூர் போலீசார் வழக்குப்பதிந்து, பைக் ஓட்டி வந்த, அசிராமணி, குள்ளம்பட்டியை சேர்ந்த சதீஷ், 38, என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு சங்ககிரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சதீ-ஷூக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பாபு உத்தர-விட்டார்.