/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்
/
கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்
கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்
கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா கோலாகலம்
ADDED : ஜூலை 31, 2024 07:45 AM
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி, கடந்த, 7ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
தொடர்ந்து, 23ல் பூச்சாட்டுதல், 24ல் கொடியேற்றம் நடந்து, 29 வரை, அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்க-ளுக்கு அருள்பாலித்தார். நேற்று கம்பம் நடும் விழா நடந்தது.அதற்கு சிறப்பு பூஜை செய்த பின், கோவில் பிரகாரத்தில் கொடிமரம் சகிதமாக மும்முறை வலம் வந்து, இரவு, 9:04 மணிக்கு, கம்பம் நட்டு தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்கள், கம்பம் மீது பூக்களை துாவி, ஓம்சக்தி, பராசக்தி என, முழக்கமிட்டனர். முன்னதாக கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம், ஆராதனை செய்து விசேஷ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கம்பம் நட்டதும், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழி-பட்டனர்.வரும் 5 இரவு சக்தி அழைத்தல், 6 காலை சக்தி கரகம் எடுத்தல், 7 முதல், 9 வரை பொங்கல் வைபவம், உருளுதண்டம் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். 11ல் சத்தாபரணம், 12ல் மஞ்சள் நீராட்டு விழா, 13ல் பால்குட ஊர்வலத்துடன் திருவிழா நிறை-வடைகிறது.கோட்டை மாரியம்மனை தொடர்ந்து அம்மா-பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்-டறை மாரியம்மன், குகை மாரியம்மன், பொன்-னம்மாபேட்டை, நஞ்சம்பட்டி, சஞ்சீவிராயன்-பேட்டை, அன்னதானப்பட்டி உள்பட மாநகரின் பல்வேறு அம்மன் கோவில்களில் கம்பல் நடுதல் விழா வெகுவிமரிசையாக நடந்தன.