ADDED : ஜூலை 31, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த குப்பனுாரில், 'அட்மா' திட்டத்தில் பயறு வகை பயிர்களில், 'விதை நேர்த்தி மற்றும் உற்பத்தி மேம்பாட்டு தொழில்நுட்பங்கள்' தலைப்பில், விவசாயிக-ளுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் துணை இயக்குனர் கண்ணன் தலைமை வகித்தார். உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நாகராஜன் முன்-னிலை வகித்தார்.
அதில் வேளாண் உதவி இயக்குனர் சரஸ்வதி, துணை வேளாண் அலுவலர் சீனிவாசன், வேளாண் துறை திட்டங்கள், மானியம் குறித்து விளக்கம் அளித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி, 'அட்மா' திட்டம் குறித்தும், விதை நேர்த்தி செய்வதன் முக்கியத்துவம் குறித்து செயல் விளக்கம் அளித்தார். விவசா-யிகள் பலர் பயன்பெற்றனர்.