/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.94 லட்சம் மோசடி கோவையில் 2 பேர் சிக்கினர்
/
ரூ.94 லட்சம் மோசடி கோவையில் 2 பேர் சிக்கினர்
ADDED : மே 11, 2025 01:26 AM
சேலம், ஆத்துார், முல்லைவாடியை சேர்ந்தவர் பிரபாகரன், 28. இவரது டெலிகிராமில், 'பணம் முதலீடு செய்தால் நல்ல லாபம் வரும்' என வந்த விளம்பரத்தை நம்பி, பல தவணைகளாக, 94 லட்சம் ரூபாய் செலுத்தி ஏமாற்றம் அடைந்தார். அவர் புகார்படி, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாாரித்ததில், கரூரை சேர்ந்த மைலேஸ்வரன், 19, துாத்துக்குடியை சேர்ந்த ஆதித்யா, 20, ஆகியோர், கோவையில் தங்கி, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ததை கண்டுபிடித்து, நேற்று இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம், இரு மொபைல் போன்கள், சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த மோசடியில் பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்களுக்கும் தொடர்பு உள்ளதால், அவர்களையும் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.பி., கவுதம் கோயல், 'முதலீடு மோசடி, போலி விளம்பரங்கள், ஓ.டி.பி., பார்சல், கல்வி உதவித்தொகை, கே.ஒய்.சி., புதுப்பிப்பு, கஸ்டமர் கேர், ஆன்லைன் வேலைவாய்ப்பு, கிரடிட் கார்டு, மொபைல் கேம், கடன் செயலி தொடர்பான மோசடிகள் குறித்து, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என, கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பண மோசடி, சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு, உதவி எண்: 1930, www.cybercrime.gov.on என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்யலாம் என, தெரிவித்துள்ளார்.

