/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழையால் பருத்தி சேதம் அதிகாரிகள் கள ஆய்வு
/
மழையால் பருத்தி சேதம் அதிகாரிகள் கள ஆய்வு
ADDED : மே 11, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி, வீரபாண்டி, இனாம்பைரோஜி ஊராட்சி புதுப்பாளையம் ஏரி உபரி நீர், பிச்சம்பாளையத்தில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்தது. இதனால் அளவுமீறி தண்ணீர் தேங்கியதால் அப்பகுதியில் உள்ள சோளம், பருத்தி செடிகள் மூழ்கி சேதமாகின. குறிப்பாக, 30 ஏக்கரில் பயிரிட்டிருந்த, 15 விவசாயிகளின் பருத்தி செடிகள் மூழ்கின.
இதுகுறித்து நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வீரபாண்டி வட்டார வேளாண் அதிகாரிகள், வருவாய்த்துறையினர், அப்பகுதிகளில் கள ஆய்வு செய்து, சேதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

