/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டி.ஜி.சி.டி., முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
டி.ஜி.சி.டி., முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : மே 27, 2025 02:14 AM
சேலம்,சேலத்தில் அமைந்துள்ள, தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லுாரி (தன்னாட்சி) சார்பில், 2016, 2017 மற்றும் 2018ம் ஆண்டு முடித்த முன்னாள் மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு, கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது.
நினைவுகளை மீட்டெடுக்கவும், பழைய நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்கும், தங்கள் இரண்டாவது வீட்டை மீண்டும் பார்வையிடும் வாய்ப்பாக இந்த சந்திப்பு அமைந்தது. அவர்கள், கல்லுாரி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவையும், பங்களிப்பையும் பாராட்டினர்.
பட்டப்படிப்பு வாழ்க்கைக்கு பிறகு, மாணவர்கள் தங்கள் பயண அனுபவங்களை பகிர்ந்துகொண்ட போது, வளாகம் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக நிரம்பியது. கலாசார நிகழ்ச்சிகள், உரையாடல் அமர்வுகள் மற்றும் வளாக சுற்றுப்பயணம் போன்ற நிகழ்வுகள், கல்லுாரி நாட்களின் இனிமையான நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்தன.
இந்த சந்திப்பில் உற்சாகமாக பங்கேற்ற அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும், நிர்வாகம் நன்றியை தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் டி.ஜி.சி.டி., குடும்பத்துடன் இணைந்திருக்குமாறு கேட்டுக் கொண்டது.