/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
/
சாலை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஜூன் 21, 2025 12:45 AM
சேலம், சேலம் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மண்டல பகுதிகளில் சாலையோரங்களில் காய்கறி, பழங்கள், பூக்கள், தேங்காய் உள்ளிட்ட சிறு, குறு வியாபாரம் செய்வோருக்கு, சான்றிதழ், அடையாள அட்டைகள் நேற்று வழங்கப்பட்டன.
முன்னதாக மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன், வியாபாரிகளின் இருப்பிடங்களுக்கு சென்று, அடையாள அட்டை வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து இளங்கோவன் கூறுகையில், ''சேலம் மாநகர், சாலையோரங்களில், காலை, 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை வியாபாரம் செய்வோர், 3,270 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக, 45 பேருக்கு அடையாள வழங்கி, அதற்கான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இனி மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மீதி, 2,225 பேருக்கு, அடையாள அட்டை, ஒரு வாரத்தில் வழங்கப்படும்,'' என்றார்.