/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுட்டுப்பிடித்த கொள்ளையனின் தாய், மனைவிக்கு 'காப்பு'
/
சுட்டுப்பிடித்த கொள்ளையனின் தாய், மனைவிக்கு 'காப்பு'
சுட்டுப்பிடித்த கொள்ளையனின் தாய், மனைவிக்கு 'காப்பு'
சுட்டுப்பிடித்த கொள்ளையனின் தாய், மனைவிக்கு 'காப்பு'
ADDED : மே 27, 2025 02:13 AM
சங்ககிரி சங்ககிரி அருகே துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட கொள்ளையனின், தாய் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் வாழகுட்டை பகுதியில், நடந்து சென்ற பெண்ணை, டூவீலரில் வந்த ஆசாமி தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த முக்கால் பவுன் தோடு, மூக்குத்தியை பறித்து சென்றார். மகுடஞ்சாவடி அருகே மொட்டாண்டிபாளையத்தில் ராசம்மாள், 75, என்பவரை தாக்கி, தங்க மோதிரத்தை அடையாளம் தெரியாத நபர் பறித்து சென்றார்.
இரு வழக்குகளிலும் தேடப்பட்டு வந்த நரேஷ்
குமாரை, தனிப்படை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், சங்ககிரி மலை அடிவாரத்தில் சுற்றி வளைத்தனர். அரிவாளால் போலீசார் இருவரை வெட்டி தப்ப முயன்றவரை, துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். அவரிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், காடையாம்பட்டி தாலுகா கட்டிக்காரனுாரில் வசிக்கும் தாய் புஷ்பா, 54; சேலம், அரிசிபாளையத்தில் வசிக்கும் மனைவி வீணா, 23, ஆகியோரிடம் நகையை, கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.