/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி பேரணி
/
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி பேரணி
ADDED : ஜூன் 02, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 'பிட் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி, சேலம் காந்தி மைதானத்தில், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று காலை, 6:00 மணிக்கு நடந்தது.
சேலம், 'சாய்' விளையாட்டு விடுதி உதவி இயக்குனர் மஞ்சுளா தொடங்கிவைத்தார். அண்ணா பூங்கா, தமிழ் சங்கம் சாலை, அம்பேத்கர் ரவுண்டானா வரை சென்ற பேரணி, மீண்டும் காந்தி மைதானத்தில் முடிந்தது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.