/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோடா பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'
/
சோடா பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'
சோடா பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'
சோடா பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 02, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, திப்பிரெட்டியூரை சேர்ந்தவர் சஞ்சீவிரெட்டி, 50. செங்கல் சூளை தொழிலாளி. இவர் கடந்த, 30 இரவு, பூசாரிப்பட்டி, இந்திரா நகர் அருகே பேக்கரியில் சிகரெட் வாங்க சென்றார்.
அங்கிருந்த சிலருடன், அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் சோடா பாட்டில், கட்டை, கடையில் இருந்த சேரால், சஞ்சீவிரெட்டியை, சிலர் தாக்கினர். படுகாயம் அடைந்த அவர், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து, நேற்று முன்தினம் இந்திரா நகரை சேர்ந்த நாகராஜ், 29, ராம், 31, செல்லதுரை, 25, ஆகியோரை கைது செய்தனர்.