ADDED : ஜூன் 02, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: வீரபாண்டி, பாலம்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளி லோகநாதன், 40. நேற்று மாலை, 6:30 மணிக்கு, ஹீரோ பைக்கில், அரியானுாரில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, சேலம் நோக்கி வந்த, 'ஆல்டோ' கார், மோதியதில் துாக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார்.
அவரை, மக்கள் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியில் இறந்தார். காரை விட்டு தப்பி ஓடிய டிரைவர் குறித்து, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.