/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ரூ.50 லட்சத்தில் மருது சகோதரர்களுக்கு சிலை
/
சிவகங்கையில் ரூ.50 லட்சத்தில் மருது சகோதரர்களுக்கு சிலை
சிவகங்கையில் ரூ.50 லட்சத்தில் மருது சகோதரர்களுக்கு சிலை
சிவகங்கையில் ரூ.50 லட்சத்தில் மருது சகோதரர்களுக்கு சிலை
ADDED : ஜூன் 25, 2024 11:19 PM
சிவகங்கை: சிவகங்கையில் மருதுபாண்டியர்களுக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு, நகர் மக்கள் சார்பில் நகராட்சி தலைவர் துரை ஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டியர் சிலைகள் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ளன. ஆனால், அவர்கள் ஆட்சி செய்த சிவகங்கையில் சிலை அமைக்கப்படவில்லை. தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தினர். சிவகங்கையில் மருதுபாண்டியருக்கு சிலை அமைக்க வேண்டும் என நகராட்சி கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றினர்.
இத்தீர்மான நகலுடன் முதல்வர் ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் ராஜா ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நகராட்சி தலைவர் துரை ஆனந்த் கூறியதாவது: சிவகங்கையில் மருது சகோதரர்கள் சிலை அமைக்க அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியதற்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பெரியகருப்பன், ராஜா ஆகியோருக்கு நகர் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன், என்றார்.