நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் வேலுநாச்சியார் நினைவு ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிலாளர் சங்க கொடியேற்று விழா கூட்டம் நடந்தது.
செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். தலைவர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் கோபால், மாவட்ட குழு உறுப்பினர் கங்கை சேகரன், ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சகாயம், கம்யூ., நகர செயலாளர் மருது, மாவட்ட தலைவர் காசிலிங்கம் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மத்திய மாநில அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.