ADDED : ஜூலை 25, 2024 04:36 AM

காரைக்குடி: காரைக்குடி ராஜராஜன் சி.பி.எஸ்.சி.,பள்ளியில் பிளஸ் 1 படித்து வருபவர் மாணவி மெய்யம்மை 16. இவர், அமெரிக்காவில் நடந்த சயின்ஸ் எக்ஸ்போவில் பங்கேற்று ஹியூமன் ஆட்டோமேஷன் கன்ட்ரோல் ரோபோட் என்ற ப்ராஜெக்ட் சமர்ப்பித்தார்.
இவரது ப்ராஜெக்ட் முதலிடம் பிடித்ததோடு, இலவசமாக நாசா செல்லும் வாய்ப்பையும் பெற்றார். அதன் மூலம் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இன்டெர்ன்ஷிப் பயிற்சி பெற்றார். மேலும் அங்கு நடந்த வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையில் மெய்யம்மை பேசினார். அங்கு கலியமூர்த்தி ஐ.பி.எஸ்., மெய்யமைக்கு 'குரல் தேனி' விருது வழங்கி கவுரவித்தார்.
மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. இதில் அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா தலைமையேற்று பாராட்டினார். நல்லாசிரியர் தங்கம் மூர்த்தி, காரைக்குடி கனரா வங்கி தலைமை மேலாளர் விட்டல் மல்லப்பா மலகி வாழ்த்தினர். முதல்வர் சிவக்குமார், பள்ளி முதல்வர்கள் வடிவாம்பாள், வெங்கடரமணன் உள்ளிட்ட பலர் பேசினர்.