/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலப்பசலையில் சிவன் சிலை பிரதிஷ்டை வழிபாடு
/
மேலப்பசலையில் சிவன் சிலை பிரதிஷ்டை வழிபாடு
ADDED : ஜூலை 25, 2024 04:36 AM

மானாமதுரை: மேலப்பசலையில் சிதலமடைந்து கிடந்த சிவன் சிலையை சீரமைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்படுகிறது.
மானாமதுரை மேலப்பசலை அருகே சிவன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அவ்வழியாக சென்றவர்கள் முன்பு வழிபட்டு வந்துள்ளனர். காலப்போக்கில் அந்த சிதிலமடைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு சிவன் சிலை மண்ணுக்கு அடியில் பாதி புதைந்திருந்தது.
இப்பகுதியைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் மேலப்பசலை கிராம மக்கள் சிவன் சிலையை தோண்டி எடுத்து அப்பகுதியில் வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் மேலப்பசலை கிராம மக்கள் மற்றும் கோவையை சேர்ந்த சிலர் இணைந்து அந்த இடத்தில் கோயில் அமைத்து சிலைக்கு பீடம் அமைத்து பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தி வருகின்றனர்.