ADDED : ஜூன் 13, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: சிவகங்கையில் காங்., வேட்பாளர் கார்த்தியை வெற்றி பெற வைத்ததை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்க முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் திருப்புவனம் வந்திருந்தார். மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, நகர் தலைவர் நடராசன்உ ள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்சி நிர்வாகிகளிடம் பேசும் போது நாம் தமிழர் கட்சியை நாம் குறைத்து மதிப்பிட்டு விட கூடாது. சராசரியாக 80 ஆயிரம் ஓட்டுக்கள் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு 18 முதல் 21 வயதுடைய இளைஞர்கள் வாக்களித்ததுடன் தங்களது பெற்றோர்களையும் வாக்களிக்க வலியுறுத்தியுள்ளனர்.எனவே காங்கிரஸ் கட்சியினர் கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும் என்றார்.