/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மக்கள் தொடர்பு முகாம்: 108 பயனாளிக்கு உதவி
/
மக்கள் தொடர்பு முகாம்: 108 பயனாளிக்கு உதவி
ADDED : ஜூன் 13, 2024 06:04 AM
சிவகங்கை: இளையான்குடி அருகே வல்லகுளத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 108 பயனாளிகளுக்கு ரூ.39.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி முன்னிலை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கோட்டாட்சியர் விஜயகுமார், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி, வல்லக்குளம் ஊராட்சி தலைவர் சரளாதேவி, சாத்தனி ஊராட்சி தலைவர் சிராஜூதீன், தாசில்தார் கோபிநாத் பங்கேற்றனர். முகாமில் உழவர் பாதுகாப்பு திட்டம், பட்டா மாறுதல், வேளாண் இடு பொருட்கள் வழங்கல் என பல்வேறு திட்டப்பணிகள் மூலம் 108 பயனாளிகளுக்கு ரூ.39.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.