/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் பயிர் மதிப்பீட்டு ஆய்வு திட்ட பயிற்சி முகாம்
/
சிவகங்கையில் பயிர் மதிப்பீட்டு ஆய்வு திட்ட பயிற்சி முகாம்
சிவகங்கையில் பயிர் மதிப்பீட்டு ஆய்வு திட்ட பயிற்சி முகாம்
சிவகங்கையில் பயிர் மதிப்பீட்டு ஆய்வு திட்ட பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 25, 2024 04:27 AM
சிவகங்கை: சிவகங்கையில் புள்ளியியல், வேளாண்மை பொறியியல் துறை ஊழியர்களுக்கான பயிர் மதிப்பீட்டு ஆய்வு திட்டம் குறித்த பயிற்சி நடைபெற்றது.
சிவகங்கை தோட்டக்கலைத்துறை அலுவலக கருத்தரங்கு கூடத்தில் நடந்த பயிற்சி வகுப்பிற்கு புள்ளியியல் துணை இயக்குனர் சுந்தர்ஆனந்த் தலைமை வகித்தார். மதுரை மண்டல புள்ளியியல் இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் சிறப்பு வகித்தார். தேசிய மாதிரி ஆய்வு திட்ட உதவி இயக்குனர் ரத்தினம், வேளாண்மை துணை இயக்குனர் மதுரைசாமி, புள்ளியியல் உதவி இயக்குனர் கருப்பசாமி, புள்ளியியல் அலுவலர் கண்ணதாசன் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி முகாமில், புள்ளியியல், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அலுவலர், ஊழியர்களுக்கு பயிர் மதிப்பீட்டாய்வு திட்டம், திருந்திய பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் ஆகியவற்றிற்கான பயிர் அறுவடை பரிசோதனை தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.