/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
/
தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 11:16 PM

சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பை தடுக்க தவறியதை கண்டித்தும் தே.முதி.க., வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமை வகித்தார்.
மாவட்ட அவைத் தலைவர் அருணா கண்ணன், மாவட்ட பொருளாளர் துரை பாஸ்கரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், பொதுக்கழு உறுப்பினர் மைசூர் ரகுமான், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சவுந்தர்ராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஞானமுத்து, மாயழகு, செல்லக்கண்ணு, கழக மகளிர் அணி துணை செயலாளர் அங்கையர் கன்னி, சிவகங்கை நகரச் செயலாளர் தர்மராஜ், நகர அவைத் தலைவர் மாரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.