sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தொழில் முனைவோருக்கு கடன்    

/

தொழில் முனைவோருக்கு கடன்    

தொழில் முனைவோருக்கு கடன்    

தொழில் முனைவோருக்கு கடன்    


ADDED : ஜூன் 25, 2024 11:15 PM

Google News

ADDED : ஜூன் 25, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை தொழில் துவங்க வங்கி கடன் வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: படித்த, முதல் தலைமுறை தொழில் முனைவோர் பயன்பெறும் விதத்தில், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற 2024 - 25 ம் ஆண்டில் 32 பேர்களுக்கு மானியத்தொகையாக ரூ.3.11 கோடி வரை இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

இதில், உற்பத்தி, சேவை தொழில்கள் துவங்க குறைந்தது ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 5 கோடி வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறலாம்.

இக்கடனுதவிக்கு விண்ணப்பிக்க வயது 21 முடிந்திருக்க வேண்டும். கல்வி தகுதி பிளஸ் 2, ஐ.டி.ஐ., பட்டயம், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பொது பிரிவினர் வயது 45, சிறப்பு பிரிவினர் (ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட, மிக பிற்பட்ட, சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ) வயது 55க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

வருமான வரம்பு இல்லை. தமிழ்நாட்டில் வசிக்கும் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்.

பொது பிரிவினருக்கு திட்டமதிப்பில் சொந்த முதலீடு 10, சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் இருக்க வேண்டும். துவக்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.75 லட்சம் முன்முனை மானியமும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிக்கு கூடுதலாக 10 சதவீதம் (அதிகபட்சம் ரூ.10 லட்சம்) மானியமும், வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீத மானியமும் உண்டு.

தென்னை நார் கயிறு, கயிறு துகள் கட்டிகள், ஜின்னிங் தொழிற்சாலை, முந்திரி பதப்படுத்துதல், குளிர்பதன கிடங்கு, சிறுதானிய உணவு பொருள், கேக் மற்றும் பிஸ்கட் தயாரிப்பு, இரும்பு பர்னிச்சர், ஹாலோ பிளாக், உலர் சாம்பல் செங்கல், எரிபொருள் கட்டி தயாரித்தல், பி.வி.சி., பைப், பிளாஸ்டிக் பாட்டில், நோட்டு புத்தகம், அட்டை பெட்டி, வாகன உதிரி பாகம், ஆயத்த ஆடைகள், டிஜிட்டல் பிரிண்டிங், போட்டோ லேப் போன்று ஏராளமான தொழிலுக்கு வங்கி கடன் வழங்கப்படும்.

புதிய தொழில் துவங்க விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கவும்.

அதன் நகலை, அசல் சான்றுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் சமர்பிக்க வேண்டும்.

மேலும் விபரத்திற்கு தொழில் மைய மேலாளரை 89255 33989ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us