/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
சிவகங்கையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 25, 2024 04:28 AM

சிவகங்கை: சிவகங்கை பழைய மருத்துவமனை ரோட்டோரத்தில் ஆக்கிரமித்து வைத்திருந்த மீன் கடை, தள்ளுவண்டி கடைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
சிவகங்கை நகரில் பல தெருக்களில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.சிவகங்கை நகராட்சியில் நேற்று சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியை நகராட்சி தலைவர் துரைஆனந்த் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக இளையான்குடி ரோட்டில் பழைய மருத்துவமனை பகுதியில் ரோட்டையும் நடைபாதையையும் ஆக்கிரமித்து வைத்திருந்த மீன் கடைகள் தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தினர்.
நகராட்சி தலைவர் துரைஆனந்த் கூறுகையில்,சிவகங்கையில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களிடம் முறையாக நகராட்சியால் அனுமதி கொடுத்த இடங்களில் மட்டும் பொருட்களை வைத்து விற்பனை செய்து கொள்ள அறிவுறுத்தி வருகிறோம்.
நகரின் முக்கிய கடைவீதிகளில் உள்ள ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்துள்ளோம்.
ஒரு வாரத்தில் அவர்களே ஆக்கிரமிப்பை எடுக்கவில்லை என்றால் நகராட்சியால் அனைத்து ஆக்கிரமிப்பும் எடுக்கப்படும் என்றார்.