sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வைக்கோல் கட்டு விலை கடும் உயர்வு மேலும் உயர வாய்ப்புள்ளதால் தவிப்பு

/

வைக்கோல் கட்டு விலை கடும் உயர்வு மேலும் உயர வாய்ப்புள்ளதால் தவிப்பு

வைக்கோல் கட்டு விலை கடும் உயர்வு மேலும் உயர வாய்ப்புள்ளதால் தவிப்பு

வைக்கோல் கட்டு விலை கடும் உயர்வு மேலும் உயர வாய்ப்புள்ளதால் தவிப்பு


ADDED : ஜூலை 25, 2024 04:28 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் தட்டுப்பாடு காரணமாக வைக்கோல் கட்டு விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், கொந்தகை, கீழடி, கட்டமன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கோ 51, என்.எல்.ஆர், ஆர்.என்.ஆர்., உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்படுவது வழக்கம், ஜனவரியில் அறுவடை தொடங்குவதால் அப்போது வைக்கோல் அதிகம் கிடைக்கும். பசு மாடு, காளை மாடு, எருமை மாடு வளர்ப்பவர்கள் மொத்தமாக வைக்கோல் கட்டுகளை வாங்கி வைத்து பயன்படுத்துவார்கள்.

ஏக்கருக்கு 35 முதல் 50 கட்டு வைக்கோல் வரை கிடைக்கும், நெல் ரகங்களை பொறுத்து இது மாறுபடும். வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் பலரும் நெல் பயிரிடுவது வழக்கம், மழை பெய்யாவிட்டாலும் வைகை அணையில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் திறப்பதால் ஓரளவிற்கு விளைச்சல் கிடைக்கும்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடை காலத்தில் கால்நடை வளர்ப்பவர்கள் விவசாயிகளிடம் வைக்கோல் கட்டுகளை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து கொள்வார்கள், கோடை விவசாயத்தை பெரும்பாலும் பம்ப்செட் கிணறு வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே மேற்கொள்வார்கள். திருப்புவனம் வட்டாரத்தில் இந்தாண்டு கடும் கோடை வெயில் காரணமாக 300 ஏக்கரில் மட்டுமே நடவு பணிகள் நடந்தன. இதனால் போதிய விளைச்சல் இன்றி வைக்கோலும் குறைந்து விட்டன. 35 கட்டுகள் கிடைக்கும் இடத்தில் 20 முதல் 22 கட்டுகள் வரையே கிடைக்கின்றன.

அதனை வாங்குவதற்கு பெங்களுர் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்ததால் விலை உயர்ந்துள்ளது. கேரளாவில் நெல் விவசாயம் இல்லாததால் கால்நடைகளுக்கு தமிழகத்தில் இருந்துதான் வைக்கோல் கொண்டு செல்கின்றனர். ஒரு லாரியில் அதிகபட்சம் 165 கட்டுகள் வரை ஏற்றலாம் என்பதால் வியாபாரிகள் வைக்கோல் கொள்முதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் வரை ஒரு கட்டு 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மாதம் 120 முதல் 140 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

வியாபாரிகள் கூறுகையில்: பெங்களுர், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள் ஏற்றி வரும் லாரிகள் திரும்ப செல்லும் போது வைக்கோல் கட்டுகளை ஏற்றி செல்கின்றனர். தமிழகத்தில் 80 ரூபாய்க்கு வாங்கப்படும் வைக்கோல் கட்டுகள் கேரளா, பெங்களூருவில் 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்துள்ளதால் வைக்கோல் கட்டு விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளியூர் வியாபாரிகள் விலை கூடுதலாக வழங்குவதால் விவசாயிகள் வெளி மாநில வியாபாரிகளிடமே வைக்கோல் கட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் உள்ளுரில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு வைக்கோல் கிடைப்பதில்லை.

கொந்தகை முனியாண்டிபுரம் விவசாயி ராஜேஸ்வரி கூறுகையில்: முன்பு பயிரிட்ட போது ஏக்கருக்கு 35 கட்டுகள் வரை வைக்கோல் கிடைத்தது. தற்போது கோடை விவசாயத்தில் 20 கட்டுகள் வரையே கிடைத்து வருகிறது. கறவை மாடுகளுக்கு தினசரி நூறு ரூபாய் வரை செலவாகிறது. அனைத்து செலவும் போக நாள் ஒன்றுக்கு ஐம்பது ரூபாய் மட்டுமே கிடைக்கிறது என்றார்.






      Dinamalar
      Follow us