ADDED : ஜூலை 25, 2024 04:24 AM
சிவகங்கை: காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணி புரிபவர் ராஜதுரை. இவரும் ஊர்காவல் படையை சேர்ந்த சஞ்சீவி ராஜ் என்பவரும் நேற்று முன்தினம் இரவு வளையம் பட்டியில் ரோந்து சென்றனர்.
அப்போது போதையில் டூவீலரில் வந்த சேசுராஜ் மகன் மைக்கேல் கிறிஸ்டோபரிடம் 22, விசாரித்தனர். அப்போது போலீசாருக்கும் மைக்கேல் கிறிஸ்டோபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மைக்கேல் கிறிஸ்டோபர், போலீசார் ராஜதுரை மற்றும் ஊர்காவல் படை சஞ்சீவிராஜ் ஆகியோரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலகலப்பு ஏற்பட்டது.
அருகில் இருந்த கிறிஸ்டோபர் அக்கா ஸ்டெபி, அப்பா சேசுராஜ், அம்மா மேரி ஆகியோர் சேர்ந்து போலீஸ் ராஜதுரையையும், ஊர்காவல் படை சஞ்சீவி ராஜையும் தாக்கியுள்ளனர். ராஜதுரை காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். காளையார்கோவில் போலீசார் மைக்கேல் கிறிஸ்டோபர் குடும்பத்தின் மீது வழக்கு பதிந்து மைக்கேல் கிறிஸ்டோபரை கைது செய்தனர்.