/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைக்கிராமத்தில் பயணியர் நிழற்குடை இடியும் அபாயம்
/
சாலைக்கிராமத்தில் பயணியர் நிழற்குடை இடியும் அபாயம்
சாலைக்கிராமத்தில் பயணியர் நிழற்குடை இடியும் அபாயம்
சாலைக்கிராமத்தில் பயணியர் நிழற்குடை இடியும் அபாயம்
ADDED : ஜூலை 25, 2024 04:35 AM

சாலைக்கிராமம்: சாலைக்கிராமத்தில் பயணியர் நிழற்குடை மிகவும் சேதமடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளதால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாலைக்கிராமத்திலிருந்து ஆனந்துார்,ஆர்.எஸ்.மங்கலம்,பரமக்குடி, ராமநாதபுரம்,ராமேஸ்வரம்,மானாமதுரை மற்றும் அருகிலுள்ள 50க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்ற நிலையில் இந்த பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால் சுவர் இடிந்து பயணிகள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயணிகள் நலன் கருதி இந்த பஸ் ஸ்டாப்பை இடித்து விட்டு புதிய பஸ் ஸ்டாப் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.