ADDED : ஜூன் 07, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை சங்கு விநாயகர் கோவிலில் ஜூன் 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. கோயில் குடிமக்கள் வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து சுவாமி சன்னதி முன் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பக்தர்கள் மாம்பழம் மற்றும் பல்வேறு பழ தட்டுகள், பூத்தட்டுகளை ஊர்வலமாக கொண்டு சென்று சுவாமிக்கு படையலிட்டனர்.
கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையும், பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து அலகு குத்தி பால் குடம் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.