ADDED : ஜன 26, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை; குடியரசு தின விழாவை முன்னிட்டு மானாமதுரை ரயில்வே போலீசார் எஸ்.ஐ., தனுஷ்கோடி, ஏட்டு ராஜா, போலீசார் மீனாட்சி சுந்தரம், செல்வம், சரவணன், சிங்கத்துரை ஆகியோர் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் ரயில்களில் மெட்டல் டிடெக்டர்களை கொண்டு வெடிகுண்டு பரிசோதனை மற்றும் பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை பரிசோதனை செய்தனர்.
மானாமதுரை வைகை ஆற்று பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பாலத்தில் நடந்து சென்று வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா என பரிசோதனை செய்தனர்.

