/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புத்தாக்க பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
/
புத்தாக்க பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 20, 2025 06:10 AM

சிவகங்கை: இளநிலை பொறியியல் பட்டயபடிப்பு முடித்த ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு 18 வாரம் பொறியாளர் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படை பயிற்சி வழங்கப்படுகிறது. இளநிலை பொறியியல் பட்டயபடிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் கணினி பொறியியல் நிபுணத்துவத்தில் புதுமை திறன்களை வழங்குவதாகும். மேலும் மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை, தானியங்கி தொழில் துறை, இயந்திரவியல் மற்றும் சேர்க்கை உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத்திறன்களை உள்ளடக்கிய பயிற்சி வழங்கி அதிநவீன தொழில் நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் நிபுணராக உருவாக்குவதற்கான பாதையை வழிவகுப்பதே இப்பயிற்சியின் நோக்கம்.
மேலும் தாட்கோ மூலம் கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞர்கள் தனியார் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 2022, 2023 மற்றும் 2024 ம் கல்வி ஆண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயபடிப்பில் தேர்ச்சி பெற்று, வயது 21 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தொடர்ந்து 18 வாரம் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி பெற கோயம்புத்துார், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்றுக்கொள்ளும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம், என்றார்.