/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பெரியகோவில் வளாகத்தில் தரை தளம் சீரமைப்பு துவக்கம்
/
பெரியகோவில் வளாகத்தில் தரை தளம் சீரமைப்பு துவக்கம்
பெரியகோவில் வளாகத்தில் தரை தளம் சீரமைப்பு துவக்கம்
பெரியகோவில் வளாகத்தில் தரை தளம் சீரமைப்பு துவக்கம்
ADDED : ஜன 26, 2024 12:50 AM

தஞ்சாவூர்:உலகப் புகழ்பெற்ற, தஞ்சாவூர் பெரிய கோவிலின், பராமரிப்பு இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலின் உள் பிரகாரத்தில் பல இடங்களில் செங்கற்கற்களால் அமைக்கப்பட்டிருந்த தரை தளம் பெயர்ந்து மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.
இதையடுத்து கோவிலில் விமானத்தின் பின்புறம் உள்ள கருவூரார், முருகன், விநாயகர் ஆகிய சன்னிதிகள் அருகே சேதமடைந்த செங் கற்களை பெயர்த்து விட்டு, புதிய செங்கற்கள் பதிக்க 67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நேற்று துவங்கின.
தொல்லியல் துறை அனுமதியுடன் நடக்கும் இப்பணியை, கலெக்டர் தீபக் ஜேக்கப், மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி ஆய்வு செய்தனர்.