ADDED : ஜூன் 13, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் முதல் நாள் வகுப்பு துவக்கத்தை முன்னிட்டு எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. மாணவர்களை ஆசிரியர்கள் மிக்கி மவுஸ் உடை அணிந்து ஆடிப்பாடி, பூங்கொத்து, இனிப்பு, கேக்குகள் கொடுத்து வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை வகித்தார்.
பள்ளி நிர்வாகி தமயந்தி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி மாணவ மாணவிகளை பச்சை கம்பளத்தில் நடக்கச் செய்து மகிழ்ச்சி ஏற்படுத்தினார். பள்ளி செயலாளர் மத்தேயு ஜோயல் பெற்றோருடன் வந்த குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் பூமா, கவிதா, ராகினி, பாண்டிச்செல்வி, திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.
பள்ளியில் மாணவர்களுக்கான வித்தியாசமான வரவேற்பு நிகழ்ச்சியால் பெற்றோர்கள் மகிழ்ந்தனர்.