/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓய்வு தலைமை ஆசிரியரை தாக்கிய மூவர் மீது வழக்கு
/
ஓய்வு தலைமை ஆசிரியரை தாக்கிய மூவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 13, 2024 06:50 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் இடப் பிரச்சினையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டி.பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் டார், 66, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். தற்போது விவசாயம் செய்து வருகிறார்.
2017ல் இதே ஊரைச் சேர்ந்த முத்துக்காமு, சீனிவாசன், ஊர்காலன் ஆகியோர்களிடம் 26 சென்ட் இடத்தை கிரயமாக வாங்கியுள்ளார்.
இதற்கான தொகை ரூ.5.50 லட்சம் என்று பேசி ரூ.2.50 லட்சம் பணம் கொடுத்து பத்திரம் முடிந்த பின் ரூ.3 லட்சத்தை ஆறு மாதத்தில் கொடுப்பதாக செட்டில்மெண்ட் பத்திரம் கொடுத்துள்ளார்.
ஆனால் ரூ.3 லட்சத்தை மூன்று மாதத்தில் கொடுத்து பத்திரத்தில் சாட்சிகளுடன் எழுதி வாங்கி உள்ளார்.
பின்னாளில் ரூ.3 லட்சத்தை வாங்கவில்லை என்று கூறி மூவரும் மிரட்டி உள்ளனர். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த முன் விரோதமாக மனதில் வைத்து நேற்று முன்தினம் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரை முத்துகாமு, சீனிவாசன், ஊர்காலன் ஆகியோர் அசிங்கமாக பேசி, அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
டார் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் தாக்கிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.