/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
/
கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
ADDED : ஜூன் 09, 2024 05:13 AM

பெரியகுளம், : கோடை விடுமுறை நிறைவு வாரத்தை முன்னிட்டு கொடைக்கானல், மூணாறு சென்று ஊர் திரும்பும் சுற்றுலா பயணிகள்
கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியான வட்டக்காணல், வெள்ளகெவி பகுதியில் பெய்த மழை மற்றும் கும்பக்கரை அருவி பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வருகிறது.
இந்தாண்டு கோடை மழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் குளித்து விட்டு சென்றனர். பள்ளி விடுமுறை முடிந்து நாளை (ஜூன் 10) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இதனால் நேற்று கொடைக்கானல், மூணாறு உட்பட கேரளாவில் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா முடிந்து, ஊருக்கு திரும்பும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கும்பக்கரை அருவியில் குளித்து சென்றனர்.
கும்பக்கரை அருவி பகுதியில் நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை வெயில், மேகமூட்டம் என தட்பவெப்பநிலை மாறி, மாறி நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக குளித்து விட்டு சென்றனர்.