/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பேரூராட்சி துணைத்தலைவர் மீது வன்கொடுமை வழக்கு
/
பேரூராட்சி துணைத்தலைவர் மீது வன்கொடுமை வழக்கு
ADDED : ஜூன் 13, 2024 06:50 AM
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பேரூராட்சி துணை தலைவர் நிபந்தன் (தி.மு.க.,) மீது தேவதானப்பட்டி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தேவதானப்பட்டி தூய்மை பணியாளர் காலனியைச் சேர்ந்தவர் அறிவழகன் 32. இவரது தெருவில் சில வாரங்களுக்கு முன்பு தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சிமென்ட் ரோடு, சாக்கடை கட்டுமானப் பணியின் போது குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த 15 க்கும் அதிகமானோர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் விஜயாவிடம் புகார் தெரிவிக்க சென்றிருந்தனர். அங்கிருந்த பேரூராட்சி துணைத்தலைவர் நிபந்தன் 28, (தி.மு.க.,) 'உங்களுக்கு எல்லாம் குழாய் போடவா நாங்க இருக்கோம் என அறிவழகனை ' ஜாதியை கூறி' அவதூறாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து தேனி எஸ்.பி., அலுவலகத்தில் வந்த புகார் மனு பெற்றுக்கொண்டு, தேவதானப்பட்டி எஸ்.ஐ., முருகேசன், நிபந்தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.