/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாகனங்கள் ஏலம் எடுப்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
/
வாகனங்கள் ஏலம் எடுப்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
வாகனங்கள் ஏலம் எடுப்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
வாகனங்கள் ஏலம் எடுப்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : ஜூன் 29, 2024 05:02 AM
பெரியகுளம், : மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் வாகனங்களை ஏலம் எடுப்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம் அருகே வடுகபட்டி ராஜேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் 70. போடியைச் சேர்ந்த இவரது பார்ட்னர் ராம்பிரகாஷ். இருவரும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் வாகனங்களை ஏலம் எடுத்து, அந்த வாகனங்களை அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் அலுவலகம் வைத்து மறு விற்பனை செய்து வந்தனர். சந்திரசேகரனிடம் வடுகபட்டியைச் சேர்ந்த ஆனந்தன் வேலைக்கு இருந்தார்.
2023 அக் 30 ல் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை காவல் ஆய்வாளர் அவர்களால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை ஏலம் எடுப்பதற்கு சந்திரசேகரனிடம், ஆனந்தன் ரூ.4.40 லட்சம் கடன் கொடுப்பதாகவும், இதற்கு பதிலாக ஏலம் எடுத்த வாகனங்களை தன் பொறுப்பில் வைத்திருப்பதாகவும், தாங்கள் பணம் கொடுத்த பிறகு தருகிறேன் என ஆனந்தன், சந்திரசேகரிடம் கூறி பணத்தை கொடுத்து, வாகனங்களை தன் வசம் வைத்து கொண்டார். இரு மாதங்களுக்கு முன்பு சந்திரசேகரன், ஆனந்தனுக்கு வட்டியுடன் பணம் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் ஆனந்தன் இன்னும் பணம் தரவேண்டும் என வாகனங்களை திருப்பிதரவில்லை.
தென்கரை போலீசாரிடம் இரு தரப்பினர் புகாரில் நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெறுவதாக போலீஸ் ஸ்டேஷனில் எழுதி கொடுத்தனர்.
இந்நிலையில் வடுகபட்டியில் சந்திரசேகரனை, ஆனந்தன் இனி மேல் எங்கேயாவது புகார் கொடுத்தால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். தென்கரை போலீசார் ஆனந்தனை கைது செய்தனர்.