/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம் இன்று லீக் சுற்று போட்டிகள் ஆரம்பம்
/
மாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம் இன்று லீக் சுற்று போட்டிகள் ஆரம்பம்
மாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம் இன்று லீக் சுற்று போட்டிகள் ஆரம்பம்
மாவட்ட கூடைப்பந்து போட்டி துவக்கம் இன்று லீக் சுற்று போட்டிகள் ஆரம்பம்
ADDED : ஜூன் 29, 2024 05:02 AM

தேனி : தேனி எல்.எஸ்., மில் கூடைபந்தாட்ட கழகத்தின் சார்பில், மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று பகல் இரவு ஆட்டமாக துவங்கியது. இன்று 'லீக்' சுற்றுப் போட்டிகளும், நாளை இறுதி போட்டிகளும் நடக்க உள்ளன.
தேனி என்.எஸ்., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூடைப்பந்து மைதானத்தில் போட்டிகளை எல்.எஸ்., மில்ஸ் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன் துவக்கி வைத்தார். போட்டியில் 18 அணிகள் பங்கேற்றன.
ஆண்டிபட்டி மேஜிக் ஸ்டெப் அணியும், பெரியகுளம் டி.எம்.பி.சி., அணியும் மோதியதில் ஆண்டிபட்டி அணி வெற்றி பெற்றது. பெரியகுளம் எஸ்.ஜே.எஸ்.சி., அணியும், போடி சிட்னி அணியும் மோதின. இதில் 85:60 புள்ளிக்கணக்கில் பெரியகுளம் எஸ்.ஜே.எஸ்.சி., அணி வெற்றி பெற்றது. வடுகபட்டி கூடைப்பந்தாட்ட அணியும் கூடலுார் பேராசிரியர் பிரயாந்த் கிளப் அணியும் மோதியதில் வடுகப்பட்டி அணி வெற்றி பெற்றது. தேனி நகர் கூடைப்பந்தாட்ட அணியும் ராயப்பன்பட்டி பேராசிரியர் ஜெயந்த் கூடைபந்து கிளப் அணியும் மோதியதில் 58:40 புள்ளி கணக்கில் தேனி நகர் கூடைப்பந்து அணி வெற்றி பெற்றது.
மாலை, இரவு போட்டி
பெரியகுளம் பி.ஓ.பி., கிளப் அணியும் எஸ்.ஜே.எஸ்.சி., கிரீன்ஸ் கிளப் அணியும் மோதின. இதில் 85:49 புள்ளிககணக்கில் பெரியகுளம் பி.ஓ.பி., கிளப் அணி வெற்றி பெற்றது. பெரியகுளம் கேப்பிட்டல் கிளப் அணியும், போடி அணியும் மோதின. இதில் பெரியகுளம் அணி 77:39 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
பெரியகுளம் ஜேம்ஸ் நாய்ஸ் ஸ்மித் கிளப் அணி, போடி இசட். கே. எம் கூப்பர்ஸ் அணியும் மோதின. இதில் பெரியகுளம் அணி 75:53 புள்ளிகளில் வெற்றி பெற்றது. லீக் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் இன்றும், இறுதி போட்டிகள் நாளையும் நடக்க உள்ளது.